மத்தியப் பிரதேசம் திண்டோரி மாவட்டத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கடசராய் காவல் நிலைய
எல்லைக்குட்பட்ட கிக்ரதலாப் கிராமத்திற்கு அருகே. ஜபல்பூர் - அமர்கண்டக் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பிக்-அப் வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், டயர் பஞ்சர் ஆனதால் அதைக் சரி செய்ய கீழே இறங்கி சாலையோரம் நின்றிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது.
இதில் பிக்-அப் வாகனத்தின் ஓட்டுநர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.