தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு மர்ரி மஹி, பவானி ஆகியோரை பிணமாக மீட்டனர். நேற்று குண்டு வாணி பேட்டை கடற்கரையில் விக்ரம், மாதவி ஆகியோர் பிணங்கள் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கோத்த–ரோட்டில் சந்தைப்படுத்துதல் பயிற்சி மையம் உள்ளது.
இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 125 மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வந்தனர். தசரா பண்டிகை விடுமுறையை ஒட்டி நேற்று முன்தினம் 100 மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
விடுதியில் தங்கி பயிற்சி பெற்ற 25 மாணவ-மாணவிகள் ஸ்ரீகாகுளம் கிராமப்புற மண்டலத்தில் உள்ள பெத்த கனகல்லவனிப்பேட்டை கடற்கரைக்கு சென்றனர்.
இந்த பகுதியில் நாகாவலி ஆறு கடலில் சங்கமிக்கிறது. இந்த சங்கமம் பகுதியில் சேறு இருப்பதால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து போலீசார் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
விஜயநகர மாவட்டம் கெங்குவ கிராமத்தைச் சேர்ந்த மாதவி (வயது 19), கொல்லப்பள்ளி பவானி (19) பார்வதிபுரம் மன்னிய மாவட்டம் மாவுடியை சேர்ந்த மர்ரி மஹி (18) ஆகியோர் செல்பி எடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 3 பேரும் சேற்றில் சிக்கிக் கொண்டனர். மேலும் ராட்சத அலை வந்து 3 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனைக் கண்ட விக்ரம் என்ற மாணவர் மாணவிகளை மீட்க முயன்றார். அப்போது அவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு மர்ரி மஹி, பவானி ஆகியோரை பிணமாக மீட்டனர். நேற்று குண்டு வாணி பேட்டை கடற்கரையில் விக்ரம், மாதவி ஆகியோர் பிணங்கள் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.