அரியானாவில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
அரியானாவின் அம்பாலா அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, கட்டுமானத்தில் இருந்த மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர்.
அரியானாவின் அம்பாலா அருகே துல்கோட் கிராமத்தில் பிற்பகல் சுமார் 3 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து பதின்மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே மீட்புப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.