போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேட்டரி கார் தீ பிடித்து 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம், விஜயவாடா, நுன்னாவை சேர்ந்தவர் ராம்தேவ். இவரது மனைவி அருணா. இவர்களது பேரன் மற்றும் உறவினர் விஜயா. இவர்கள் 4 பேரும் நம்பூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சொந்த ஊருக்கு பேட்டரி வாடகை காரில் புறப்பட்டனர். இவர்கள் வந்த கார் விஜயவாடா மேற்கு புறவழிச்சாலையில் சென்ற போது திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. காரில் இருந்தவர்கள் வெளியே வர முடியவில்லை. அவர்கள் உயிர் பயத்தில் காப்பாற்றுமாறு கத்தி கூச்சலிட்டனர்.
அதற்குள் கார் முழுவதும் எரிந்தது. அதிலிருந்த 4 பேரும் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேட்டரி கார் தீ பிடித்து 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.