இந்தியா

நாடு முழுவதும் 324 தரமற்ற மருந்துகள் - பரிசோதனையில் கண்டுபிடிப்பு

மத்திய அளவில் நடந்த சோதனையில் 37 மருந்துகளும் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டன.

குறைபாடுள்ள மருந்து தொகுதிகளை் சந்தையிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மாதத்தில் நாடு முழுவதும் மாதாந்திரத் தரப் பரிசோதனை நடத்தியது. இதில் மாநில அளவில் நடத்தப்பட்ட சோதனையில் 287 மருந்துகளும், மத்திய அளவில் நடந்த சோதனையில் 37 மருந்துகளும் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டன.

குறைபாடுள்ள இந்த மருந்து தொகுதிகளைச் சந்தையிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம், அரசு ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு தொகுப்பு மருந்துகளுக்கு மட்டுமே இந்தத் தரமற்ற வகைப்பாடு பொருந்தும் என்றும், சந்தையில் விற்பனை செய்யப்படும் அதே மருந்தின் பிற தொகுப்புகளின் தரம் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT