இந்தியா

உ.பி.யில் கனமழை: 31 பேர் உயிரிழப்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த சூறாவளிக்காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

புயலால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து, மின் கம்பங்கள் சேதம் அடைந்தது. இதனால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. படோஹி மாவட்டத்தில் 16 பேரும், ஃபதேபூரில் 9 பேரும், பதாயூனில் 5 பேரும், சோன்பத்ரா மாவட்டத்தில் ஒருவரும் என 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், உயிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.