இந்தியா

3 இடங்களில் சதமடித்த வெயில்: அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 104 டிகிரி வெப்பம் பதிவு

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று 3 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

திருத்தணியில் 102.3, கரூர் பரமத்தியில் 101, வேலூர் 99.68, திருத்தணி 102.38, சென்னை மீனம்பாக்கம் 99.32, கோயம்பத்தூர் 97.16, மதுரை விமானநிலையம் 98.96, நாமக்கல் 98.6, சேலம் 98.78, திருச்சி 95 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

கொடைக்கானல் 67.64, குன்னூர் 75.2, ஊட்டி 72.32