இந்தியா

திருப்பதியில் கார் மீது லாரி மோதி 3 பேர் பலி

படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

கர்நாடக மாநிலம் சிக்க பல்லாபூரை சேர்ந்த 5 பேர் திருப்பதி-அனந்தபூர் தேசிய நெடுஞ்சாலையில் பாக்ராபேட்டை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே தக்காளி ஏற்றிக் கொண்டு வந்த லாரி பயங்கர வேகத்தில் எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.

இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து பரிதாபமாக 3 பேர் இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.