அமெரிக்காவின் 250 ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த கொண்டாட்டங்களின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் படத்துடன் கூடிய ஆட்டோரிக்ஷாக்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக செர்ஜியோ கோர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
புதுடெல்லியில் இருந்து ஃப்ரீடம்250 கொண்டாட்டங்களைத் தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன், இந்த சிறப்பு பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் படங்களைக் கொண்ட ஆட்டோக்களை முன்னோட்டமிடுகிறோம்.
இந்த சிறப்புப் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவின் சின்னமான சுதந்திர தேவி சிலை படங்கள் ஆட்டோக்களில் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்காவின் 250வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், அமெரிக்கா-இந்திய கூட்டுறவின் வலிமை மற்றும் ஆற்றல் ஆகியவற்றை நாங்கள் மதிக்கிறோம். ஃப்ரீடம் 250 இந்தியா முழுவதும் பயணிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.