இந்தியா

வந்தே பாரத் ரெயிலில் பறந்து வந்த இதயம்: சாதித்து காட்டிய இந்திய ரெயில்வே

சூரத்தில் இருந்து புறப்​பட்டு அகம​தா​பாத்​துக்கு 2 மணி நேரத்தில் வந்தடைந்தது.

உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தானம் பெறப்பட்ட இதயம் வந்தே பாரத் ரெயில் மூலம் 2 மணி நேரத்தில் 250 கி.மீ தூரம் பயணித்து வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இதய மாற்று அறுவைச்சிகிச்சை

குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத் நகரில் உள்ள யுஎன் மேத்தா இதய​வியல் ஆராய்ச்சி மையத்​தில் நோயாளி ஒரு​வருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்​ட​மிடப்​பட்​டது.

சூரத் நகரில் உள்ள ஒருவரிடம் இருந்து இதயம் தானமாகப் பெறப்பட்டது. அந்த இதயத்தை சுமார் 250 கிலோமீட்டர் தூரமுள்ள அகம​தா​பாத்​துக்கு வந்தே பாரத் ரெயி​லில் விரை​வாக கொண்டு செல்ல திட்​ட​மிடப்​பட்​டது.

இதற்காக அகம​தா​பாத் ரெயில் நிலை​யத்​தில் இருந்து மேத்தா இதய​வியல் ஆராய்ச்சி மையத்​துக்கு கொண்டு செல்​ல சிறப்பு வழித்தடம் உரு​வாக்​கப்​பட்​டது.

இதற்​கான ஏற்​பாடு​களில் மருத்​து​வக் குழு​வினர், ரயில்வே துறை​யினர், ரயில்வே பாது​காப்பு படை போலீசார், குஜ​ராத் போலீ​சார் ஆகியோர் ஈடு​பட்​டனர்.

இந்த வந்தே பாரத் ரெயில் சூரத் நகரில் இருந்து புறப்​பட்டு அகம​தா​பாத்​துக்கு 2 மணி நேரத்தில் ஜெட் வேகத்தில் வந்தடைந்தது.

அகமதா​பாத் ரெயில் ​நிலை​யத்​தின் முதல் நடைமேடையி​ல் தானம் பெறப்​பட்ட அந்த இதயம், உடனடி​யாக யுஎன் மேத்தா இதய​வியல் ஆராய்ச்சி மையத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்டு இதய மாற்று அறுவைச்சிகிச்சை மேற்​கொண்​ட​வருக்கு வெற்​றிகர​மாக பொருத்தப்​பட்​டது.

வழக்​க​மாக சூரத் நகரில் இருந்து புறப்​படும் வந்தே பாரத் ரெயில் இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகே அகம​தா​பாத் ரெயில் நிலையம் வந்தடை​யும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வு

இந்​திய ரெயில்வேயின் ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வு இது என்றும், இச்​சம்​பவம் சேவை​யின் தனித்​து​வ​மான உதா​ரணம் என்றும் குஜராத் முதல் மந்திரி பூபேந்​திர படேல் தெரி​வித்​துள்​ளார்.

இது இந்​திய ரெயில்​வேக்கு ஒரு பெருமை மற்​றும் மனநிறைவை அளித்த தருணம். இந்​திய ரெயில்வே வரலாறு படைத்​துள்​ளது. முதல் ​முறை​யாக மும்பை சென்ட்ரல் - ​காந்​திநகர் வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரெயில் தான​மாகப் பெறப்​பட்ட ஒரு இதயத்​தை சூரத்​தில் இருந்து அகம​தா​பாத்​திற்கு வெற்​றிகரமாகக்​ கொண்​டு சேர்த்​துள்​ளது என அகம​தா​பாத் ரயில்வே கோட்ட மேலா​ளர் வேத் பிர​காஷ் எக்ஸ் தளத்​தில் பதிவிட்டுள்ளார்.