மீனவர் வலையில் சிக்கிய மீன். 
இந்தியா

ஆற்றில் மீனவர்கள் வலையில் சிக்கிய 24½ கிலோ மீன்- ரூ.17,500-க்கு விற்பனையானது

கடலில் 60 கிலோ எடை வரை வளரும்.கடந்த ஆண்டு 35 கிலோ எடையுள்ள மீன் சிக்கியதாகவும் தெரிவித்தனர்.

மாலை மலர்

திருப்பதி:

ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் பைரவபாலம் ஆற்றில் தினமும் மீன் பிடித்து வருகின்றனர்.

நேற்று மீனவர்கள் வலையில் 24½ கிலோ எடையுள்ள மீன் ஒன்று சிக்கியது.

இந்த மீன் ஏனாம் கொண்டு வரப்பட்டது. அங்கு இந்த ராட்சத மீன் ரூ.17,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மீனிற்கு முதுகுத்தண்டு தவிர அதிக முட்கள் கிடையாது.

அதனால் பெரும்பாலானோர் விரும்புவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். கோதாவரி ஆற்றில் 20 கிலோ எடை வரை வளரும் மீன்கள். கடலில் 60 கிலோ எடை வரை வளரும்.

கடந்த ஆண்டு 35 கிலோ எடையுள்ள மீன் சிக்கியதாகவும் தெரிவித்தனர்.

ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இந்த பகுதியில் அதிக அளவு எடையுள்ள மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்கி வருகிறது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.