புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களின் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இறுதி நாளான இன்று அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பரப்புரை முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளின்படி வாக்குப்பதிவு முடியும் வரை பொதுக்கூட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டு 'அமைதி காலம்' தொடங்கியுள்ளது.
இந்த மூன்று மாநிலங்களிலும் நாளை மறுநாள் (ஏப்.9) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அசாமில் 126 தொகுதிகள், கேரளாவில் 140 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்திற்கு 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கான முதற்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ல் நடைபெற்று, மே 4-ல் முடிவுகள் அறிவிக்கப்படும்.