தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் நாடுகளின் 18வது உச்சி மாநாடு தொடங்கியது.
பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா, ரஷியா, சீனா, பிரேசில், தென் ஆப்பி ரிக்கா, ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, எத்தியோப்பியா ஆகிய 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
மேலும், பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ் தான், வியட்நாம் ஆகியவை நட்பு நாடுகளாக இருக்கின்றன.
பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இந்த மாநாடு இந்தியாவில் 4-வது முறையாக நடை பெறுகிறது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக தலைவர்கள் டெல்லியில் குவிந்து உள்ளனர். நேற்று நடந்த பிரிக்ஸ் வர்த்தக மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று பிற்பகல் 2.35 மணிக்கு அதிகாரபூர்வமாக தொடங்கியது. மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபி யாண்டோ, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாக் எல்-சிசி, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ஆர். மார்கோஸ், எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி, வியட்நாம் பிரதமர் லே மின் ஹங், பிரேசில் வெளியுறவுத் துறை மந்திரி மவுரோ வியரா, நைஜீரியா துணை அதிபர் செனட்டர் காஷிம் ஷெட்டிமா, உகாண்டா துணை அதிபர் ஜெசிகா அலுபோ,
புருண்டி அதிபர் எவரிஸ்ட் ண்டாயிஷிமியே, தாய்லாந்து துணைப் பிரத மர் சிகாசக் புவாங்செட் கியோ, கியூபா வெளி யுறவுத்துறை மந்திரி புருனோ ரோட்ரிக்ஸ் பரில்லா, பெலாரஸ் வெளியுறவுத் துறை மந்திரி மாக்சிம் ரைஷென்கோவ், உருகுவே வெளியுறவு அமைச்சர் மரியோ லுபெட்கின் மற்றும் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் உள்ளிட்ேடார் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் பல சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.
இம்மாநாட்டில் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மற்றும் தெற்கு உலக நாடுகளுக்கு இடையிலான மேம்பாடு, வர்த்தகம், நிதி, தொழில்நுட்பம், நிலைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகம் மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்ப டுத்துதல் என்ற தலைப்பில் அமர்வு நடக்கிறது. இதில் பிரிக்ஸ் தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகின்றனர்.
மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று காலை தலைநகர் பிஜீங்கில் இருந்து புறப்பட்டார்.
அவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வர உள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டு இந்தியா வுக்கு வந்த ஜின்பிங், சென்னை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜின்பிங்குடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அரசியல் குழுவின் நிலைக்குழு உறுப்பினரும், அக்கட்சியின் மத்தியக் குழுவின் பொது அலுவலக இயக்குநருமான காய் கி, வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் அடங்கிய உயர்மட்ட குழுவினரும் வருகிறார்கள்.
இதற்கிடையே உச்சி மாநாட்டுக்கு இடையே இன்று மாலை 5.45 மணிக்கு பிரதமர் மோடி- ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
வர்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோ சனை நடத்துகிறார்கள்.
கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு இரு நாடுகளும் உறவைச் சீராக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வரும் நிலையில் இரு தலைவர்களின் சந்திப்பு முக்கி யத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு தலைவர்களின் சந்திப்பில் எல்லைப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே மோடி-ஜின்பிங் இருதரப்பு பேச்சு வார்த்தை தொடர்பாக இந்தியாவில் உள்ள சீன தூதர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி இடையிலான இரு தரப்புச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை சீனாவும் இந்தியாவும் செய்து வருகின்றன.
கசான், தியான்ஜின் ஆகிய இடங்களில் நடை பெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் நேரில் சந்தித்துக் கொள்வது தொடர்ந்து 3-வது ஆண்டாகும்.
இரு தரப்பு உறவுகளை நீண்ட கால கண்ணோட்டத்தில் கையாளவும், தகவல் தொடர்பை அதிகரிக்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வேறுபாடுகளைச் சரியாகக் கையாளவும், நல்ல அண்டை நாடுகளாக வும் ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவும் கூட்டாளிகளாகவும் இருக்க இந்தியாவுடன் சீனா இணைந்து செயல்படும் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் பிரதமர் மோடி இன்று காலை எத்தியோப்பிய பிரதமர், மலேசிய பிரதமர், அபுதாபி இளவரசர், வியட்நாம் பிரதமர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார்.
நேற்று ரஷிய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
இன்று மாலை 4.25 மணிக்கு பாரத் புத்தாக்க கண்காட்சியை தலைவா்கள் பாா்வையிடுகின்றனா். பின்னா் பாரத் மண்டபத்தில் தலைவா்கள் ஒன்றாக குழு புகைப்படம் எடுக்க உள்ளனா். மேலும், தலைவா்கள் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பின்னர் தலைவா்களுக்கு பிரதமா் மோடி இரவு 7.30 மணிக்கு விருந்து அளிக்கிறார். அதனுடன் இன்றைய முதல் நாள் மாநாடு நிறைவு பெறுகிறது.