இந்தியா

தெலுங்கானாவில் கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்ததை பார்த்த மாணவன் கொலை

ரவியை கிராமத்தின் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் பூச்சிகொல்லி மருந்தை கலந்து கொடுத்தனர்.

தெலுங்கானாவில், கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்ததை பார்த்த மாணவன் ரவியை, மிரட்டலால் பயந்த ஜோடி கொலை செய்தது. குளிர்பானத்தில் பூச்சிகொல்லி மருந்து கலந்து கொடுத்ததால் ரவி உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் அடுத்த சின்னகொரு கொண்டியை சேர்ந்தவர் ரவி (வயது 15). இவர் சத்துப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்து இருந்தார்.

மிரட்டல்

அதே கிராமத்தை சேர்ந்தவர் அபர்ணா. இவர் கணவரை பிரிந்து தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அஜய் என்ற வாலிபருடன் அபர்ணாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருப்பதை ரவி பார்த்து விட்டான். இதை தனது குடும்பத்தினரிடம் கூறப்போவதாக மிரட்டினான்.

கொலை

இதனால் பயந்து போன கள்ளக்காதல் ஜோடி சிறுவனை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி ரவியை கிராமத்தின் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் பூச்சிகொல்லி மருந்தை கலந்து கொடுத்தனர்.

அதனை குடித்த ரவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரது பெற்றோர் மகனை சிகிச்சைக்காக கம்மம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக வாரங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தான்.

இது குறித்து அவரது பெற்றோர் கம்மம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அபர்ணா, அஜய் இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT