இந்தியா

13.7 கோடி views.. 2 வயது Swag சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஸ்கூட்டர் வாங்க சிறுவனையும் ஷோரூமுக்கு உடன் அழைத்துச் சென்றனர்.

வைரல் மகாராஷ்டிரா சிறுவனின் கல்விச் செலவை ஹோண்டா ஷோரூம் உரிமையாளர் ஏற்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலை சேர்ந்த 2 வயது சிறுவன் ருத்ரான்ஷ் சிங் தாக்கூர்.

இவனத் பெற்றோர் கடந்த நவம்பர் 9 அன்று, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வாங்க சிறுவனையும் ஷோரூமுக்கு உடன் அழைத்துச் சென்றனர்.

வைரலான வீடியோ

ஷோரூமில் புதிதாக வாங்கிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முன் கூலிங் கிளாஸ் அணிந்து, பாக்கெட்டில் கைகளை விட்டபடி ஸ்டைலான போஸ் கொடுத்த சிறுவனின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

குறிப்பாக சிறுவனின் பெற்றோர் தங்கள் இன்ஸ்டா கணக்கில் வெறும் 16 வினாடிகள் கொண்ட சிறுவனின் அந்த ரீல் வீடியோவை பகிர்ந்திருந்த நிலையில் அது 13.7 கோடி பார்வைகளையும், 68,000க்கும் மேற்பட்ட கமெண்ட்களையும் பெற்றது.

உதவி

சிறுவனால் ஈர்க்கப்பட்ட யவத்மாலில் உள்ள சாய் பாயிண்ட் ஹோண்டா நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் போபாடே பாட்டீல் முடிவொன்றை எடுத்தார்.

ருத்ரான்ஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை ஷோரூமுக்கு அழைத்துப் பாராட்டிய அவர், அச்சிறுவனின் எல்கேஜி முதல் பட்டப்படிப்பு வரையிலான முழு கல்வி செலவையும் தானே ஏற்பதாக உறுதியளித்தார்.

இந்த உதவிக்கு ருத்ரான்ஷின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். இதே ஷோரூமில் தான் சிறுவனின் பெற்றோர் அந்த ஸ்கூட்டரை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT