இந்தியா

135வது பிறந்தநாள்.. அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்தில் மோடி, ராகுல் காந்தி சொன்னது இதுதான்

சில சக்திகள் பாபாசாகேபின் மரபையும், நமது அரசியலமைப்பையும் சீர்குலைக்கும் நோக்கில் மிகத் திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வருகின்றன.

இந்திய அரசியலமைப்பின் தந்தை அண்ணல் அப்தேகர் உடைய 135 வது பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்படுகிறது.

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நமக்கு வெறும் ஒரு அரசியலமைப்பை மட்டுமல்ல; நீதி, சமத்துவம் மற்றும் மரியாதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு வலிமையான இந்தியாவின் கனவையே வழங்கினார்.

ஆனால் இன்று, சில சக்திகள் பாபாசாகேபின் மரபையும், நமது அரசியலமைப்பையும் சீர்குலைக்கும் நோக்கில் மிகத் திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வருகின்றன.

ஜனநாயக நிறுவனங்கள் மாற்றப்படுகின்றன; உரிமைகள் நசுக்கப்படுகின்றன; சமத்துவம் எனும் கோட்பாட்டின் மீது தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.

இந்நாடு பாபாசாகேபின் சிந்தனைகளின் மீது கட்டமைக்கப்பட்டதாகும். அவற்றைப் பாதுகாப்பதற்காக, எனது இறுதி மூச்சுவரை எனது முழு வலிமையையும் திரட்டி நான் போராடுவேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, பாபாசாகேபின் கனவுகளை மீண்டும் நனவாக்குவோம். உங்கள் அனைவருக்கும் அம்பேத்கர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

"டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் ஆளுமையும் படைப்புகளும் தேச நிர்மாணத்திற்குத் தொடர்ந்து உத்வேகமாகத் திகழும்.

சுயநலமாக இருப்பது குறுகிய அறிவுடையோர் செயல், உயரிய நற்பண்புகள் கொண்டோருக்கு, இவ்வுலகமே ஒரு குடும்பமாகும்." என்று தெரிவித்துள்ளார்.