கெளுத்தி மீன்கள்
இந்தியா

நாக்பூரில் 36 டன் தாய் கெளுத்தி மீன்கள் அழிப்பு: காரணம் என்ன?

பொதுமக்களின் தொடர் முடிவில் மீன்வளத்துறை அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் மீன்வளத்துறை சார்பில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்கள் குளங்கள் அமைத்து தாய் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அப்போது 11 குளங்களில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 36 டன்கள் தாய் கெளுத்தி (தாய் மங்கூர்) மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதை லாரிகள் ஏற்று, சுற்றுச்சூழல் பாதிப்படையாக இடத்தில் பெரிய பள்ளம் தோண்டி, அதில் கொட்டி மூடினர்.

அதிகாரிகளுக்கு வந்த புகார் அடிப்படையில் பர்ஷிவ்னி தாலுகாவில் உள்ள சிசோலி-மகதுலா பகுதியில் குளங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

உள்ளூரைச் சேர்ந்த 25 மீனவர்கள் உதவியுடன் இந்த மீன்கள் குளத்தில் இருந்து அகற்றப்பட்டன. கடந்த 3 மாதங்களில் 51 டன் மீன்கள் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அழிக்கப்பட்டது மிகப்பெரிய அளவிலானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வகை தாய் கெளுத்தி மீன்கள் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதால், இந்தியாவில் இவற்றை வளர்க்க அரசாங்கம் தடை விதித்துள்ளது.