கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பண்டா தாலுகா உள்ளது. இதன் அருகே உள்ள 4 கிராமத்தை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். இதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நேற்று 11 பேர் கள்ளச்சாராயத்திற்கு பலியாகி இருந்தனர். 54 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 30-க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.