அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நன்கொடையாக 1.54 லட்சம் ரூபாயை 103 வயது மூதாட்டி அளித்துள்ளார்.
அசாம் மாநிலம் சிராஜூலியில் உள்ள மஜ்ரோய்மாரி கிராமத்தில் கனக்லதா தாஸ் என்ற மூதாட்டி வசித்து வருகிறார்.
சமீபத்தில் கிழக்கு அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் குறித்து அறிந்து, 264 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கமிஷனர் அலுவலத்திற்கு மூதாட்டி சென்றார்.
தான் பல ஆண்டுகளாக சேமித்த 1.54 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு கமிஷனர் அலுவலத்திற்கு நேரில் சென்றார்.
அங்கு, ஆணையர் மிருதுல் யாதவை நேரில் சந்தித்து, தனது வாழ்நாள் சேமிப்பில் இருந்து முழுவதுமாக எடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2,000 வீதம் நிதி உதவியாக வழங்கினார்.
மூதாட்டி அளித்த இந்த நிதியுதவி குறித்து மாவட்ட ஆணையர் கூறுகையில், “எனது இத்தனை ஆண்டுகால சேவையில், இத்தகைய தூய்மையான மற்றும் தன்னலமற்ற மனிதநேயமிக்க செயலை நான் அரிதாகவே பார்த்துள்ளேன்.
உண்மையான கருணை மற்றும் குடிமை பொறுப்பு என்றால் என்ன என்பதை கனகலதா தாஸ் எங்களுக்கு கற்று கொடுத்துள்ளார்.
இன்று எனக்கு இவர் அளித்த ஆசி, நான் பெறக்கூடிய எந்தவொரு கெளரவத்தையும் விட மதிப்பு வாய்ந்தது” என்று ஆணையர் கூறினார்.