இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் (அக்.20) அமலுக்கு வந்தது.
இதன்மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு நியூசிலாந்து 100% வரிவிலக்கு அளிக்கும். முன்னதாக, பல இந்தியப் பொருட்கள் நியூசிலாந்தில் 10 சதவீதம் வரையிலான இறக்குமதி வரிகளை எதிர்கொண்டன.
இந்த வரி நீக்கத்தால் ஜவுளி, ஆடை, தோல், காலணிகள், ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், ஆட்டோமொபைல்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், ரசாயனங்கள், மருந்துகள், விவசாயப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகிய தொழில்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஆண்டுதோறும் 5,000 தற்காலிக வேலைவாய்ப்பு நுழைவு விசாக்களும், 1,000 பணி விடுமுறை விசாக்களும் ஒதுக்கப்படும்.
இந்தியாவும், நியூசிலாந்தும் கடந்த ஏப்ரம் மாதம் 27-ம் தேதியன்று, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளும் பரந்த சந்தை அணுகல், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் பொருளாதார உறவுகளை மேம்படுத்த இந்த ஒப்பந்தத்தில் இணைந்தன.
மேலும் 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தையும் 7 பில்லியன் டாலராக, இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளன. மேலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை எளிதாக்குவதாகவும் நியூசிலாந்து உறுதியளித்துள்ளது.