ஷேசாத் பூனவாலா
இந்தியா

1-ந்தேதி வந்து விட்டால் வாடகை செலுத்த வேண்டும்: பாஜக-வில் இருந்து வெளியேறிய ஷேசாத் பூனவாலா சொல்கிறார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியாகி கடந்த 2021-ம் ஆண்டு பாஜக-வில் இணைந்தார்.

பா.ஜ.க. கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான ஷேசாத் பூனவாலா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷேசாத் பூனவாலா அவசரமான நிதி மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-

எனக்கு வாடகை செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நான் பா.ஜ.க.-வில் இருப்பதற்கான, வீட்டு உரிமையாளர் வாடகை கேட்காமல் இருப்பது இல்லை. 1-ந்தேதியன்று என்னிடம் வாடகை கேட்டுவிடுவார். அரசியல் கட்சிகள் தொண்டர்களுக்கு பணம் வழங்குவதில்லை.

என்னையோ அல்லது வேறு எந்தவொரு தொண்டரையோ வாழ்வாதார ரீதியாக காப்பாற்றுவது பா.ஜ.க.-வின் பணி அல்ல. ஒரு அரசியல் இயக்கத்தில் இணையும்போது, ​​அது வெறும் வேலையாக இருப்பதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு கொள்கை மீதான ஈர்ப்பு, ஒரு தனிநபர் மீதான பற்று அல்லது அந்த அமைப்பு மீதான ஈடுபாடு ஆகியவற்றின் காரணமாகவே ஒருவர் தொண்டராக மாறுகிறார். அந்த மூன்று அம்சங்களும் இப்போதும் என்னிடம் அப்படியே உள்ளன.

இவ்வாறு ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.