இந்தியா

ஜம்மு காஷ்மீரில் கட்டுமான தளத்தில் நிலச்சரிவு: சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு

சம்பவம் நடந்ததும் சக தொழிலாளர்கள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து மீட்பு நடவடிக்கையை தொடங்கினர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டம், அங்கன்பத்ரி பகுதியில் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், பொறியாளர் படையை சேர்ந்த (GREF) சுமைதூக்குபவர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

காலை சுமார் 10.20 மணியளவில், மேல் சாலையில் இருந்து திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு, கீழே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு:

அதிகாரிகளின் கூற்றுப்படி, மலைச்சரிவில் இருந்து இடிபாடுகளும் சேறும் சரிந்து விழுந்தபோது, ​​நான்கு தொழிலாளர்கள் அந்த இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்ற மூவர் சிக்கிக்கொண்டனர். பாதிக்கப்பட்டவர், பூஞ்ச் ​​மாவட்டத்தின் சாஜியான் பகுதியைச் சேர்ந்த முகமது பஷீர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த உடனேயே, காவல்துறை, உள்ளூர் நிர்வாகம் மற்றும் சக தொழிலாளர்கள் இணைந்து மீட்பு நடவடிக்கையை தொடங்கினர்.

பெரும் முயற்சிக்கு பிறகு, சிக்கியிருந்த மூன்று தொழிலாளர்களும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மண்டி துணை மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று பேர் கவலைக்கிடம்:

GREF படை பிரிவின் அதிகாரி ஆஷிஷ் ரஞ்சன், GREF தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த பகுதிக்கு மேலே அமைந்துள்ள சாலையில் ஒரு தனியார் நிறுவனம் பணியாற்றி வருவதாக கூறினார்.

"திடீரென மேல் சாலையில் இருந்து சரிந்து வந்த நிலச்சரிவு எங்கள் தொழிலாளர்கள் மீது விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்," என்று அவர் கூறினார்.

காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT