கோழிக்கோடு:
66-வது தேசிய சீனியர் கைப்பந்து போட்டி கேரள மாவட்டம் கோழிக்கோட்டில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் தமிழக அணி தோல்வியை தழுவியது.
போட்டியை நடத்தும் கேரளா 25-22, 30-28, 25-22 என்ற நேர் செட் கணக்கில் தமிழகத்தை வீழ்த்தியது. தமிழகபெண்கள் அணியும் ஏற்கனவே அரை இறுதியில் தோல்வியை தழுவி இருந்தது.
பெண்கள் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 25-18, 25-14, 25-18 என்ற கணக்கில் மராட்டியத்தை தோற்கடித்தது.
இறுதிப் போட்டியில் ரெயில்வே - கேரளா அணிகள் மோதுகின்றன. இரு பிரிவிலும் அந்த அணிகளே மோதுகின்றன.
பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கும், ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டி மாலை 5 மணிக்கும் நடக்கிறது.