கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. ஒவ்வொரு வாரமும் முதல் மற்றும் மூன்றாவது புதன் கிழமைகளில் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய, காது கேளாத, வாய்பேசாத, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவர் மூலமாக கண்டறியப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நடந்த முகாமில் பங்கேற்ற 82 நபர்களில், தகுதியான 47 மாற்றுத் திறனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் சிறப்பு மருத்துவர்கள் இஸ்மாயில், பழனி, தினேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.