ஐசிசி ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க பரிசீலித்து வருகிறது. இதற்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன், ‘‘ஐசிசி-யின் இந்த திட்டம் கேலிக்குரியது’’ என்று தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
அதேபோல் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐசிசியின் பரிந்துரையை முழுவதுமாக ஆராய்ந்த பின்னர்தான் கருத்து கூற இயலும் என்று தெரிவித்துள்ளார்.