கொலை 
செய்திகள்

நத்தம் அருகே புதுமாப்பிள்ளை குத்திக்கொலை

நத்தம் அருகே புதுமாப்பிள்ளை குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் நடராஜன். விவசாயி. இவரது மகன் மாரிமுத்து (வயது30). இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உமையாள் என்பவருடன் திருமணம் நடந்தது. நடராஜனுக்கும் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா தரப்பினருக்கும் கருப்பு கோவில் பாதை பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று இரவு மாரிமுத்துவுக்கும், கருப்பையா தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கும்பல் மாரிமுத்துவை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பிஓடிவிட்டனர். போலீசார் அவிரைந்து வந்து மாரிமுத்துவை சிகிச்சைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து கருப்பையா (40), பொன்னுச்சாமி மகன் அருண் (16) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர். .