செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் ‘கியூரியாசிட்டி’ விண்கலம் தரை இறங்கி 5 ஆண்டுகள் நிறைவு

செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ விண்கலம் தரை இறங்கி இன்றுடன் ஐந்து ஆண்டு ஆகிறது.

வாஷிங்டன்:

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கியூரியா சிட்டி’ என்ற விண்கலத்தை அனுப்பியது. அது பல ஆண்டு பயணத்துக்கு பின் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி செவ்வாய் கிரகத்தில் ‘காலே கிரேடர்’ என்ற எரிமலையில் தரை இறங்கியது.

அதை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் அமைப்பு, சுற்றுச்சூழல் தட்ப வெப்பநிலை குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது. அவ்வப் போது போட்டோக்கள் எடுத்து பூமிக்கு அனுப்புகிறது.

இந்த நிலையில் கியூரியா சிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி இன்றுடன் 5 ஆண்டு ஆகிறது. இத்தகவலை ‘நாசா’ வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT