செய்திகள்

மோடி முட்டாள்கள் தினத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றுவிட்டார் - ஜிக்னேஷ் மேவானி

குஜராத் மாநிலத்தின் வாத்காம் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜிக்னேஷ் மேவானி டுவிட்டரில் பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் முட்டாள்கள் தின வாழ்த்து கூறியுள்ளார். #NarendraModi #JigneshMevani #Aprilfoolday

மாலை மலர்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி, முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜிக்னேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் ''நரேந்திர மோடி இந்த முட்டாள்கள் தினத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். சரியாக சொல்ல வேண்டும் என்றால், இந்த நாளே அவருக்கானதுதான். அவர் கொஞ்சம் கூட உறுத்தாமல் சொல்லும் பொய்கள் காரணமாக கண்டிப்பாக வரலாற்றில் இடம்பிடிப்பார். அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்'' என கூறியுள்ளார்.

இதேபோல் மற்றொரு டுவிட்டில் ''சர்வதேச முட்டாள்கள் தினத்தில் மனித இனம் உலகிற்கு கொடுக்க கூடிய மிகசிறந்த பரிசு மோடி தான்'' என கிண்டலாக கூறியுள்ளார்.