சுஷாந்த் சிங் ராஜ்புத் 
செய்திகள்

சுஷாந்த் சிங் தற்கொலை - நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்கு

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

மாலை மலர்

மும்பை:

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் அவரது தந்தை பாட்னா போலீசில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது புகார் அளித்தார். அதில் ரியா தனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாகவும் மற்றும் பணமோசடி செய்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் வந்துள்ளது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டும் அனுமதி அளித்தது. இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் மும்பை வந்தனர். அவர்கள் 10 நாட்கள் மும்பையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை பாந்த்ரா காவல் நிலையம், சுஷாந்த் சிங் வீடு உள்பட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.