செய்திகள்

புதுவையில் அடுத்த மாதம் சர்வதேச பாய்மர படகு போட்டி: முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்

புதுவையில் அடுத்த மாதம் (ஜனவரி) 25-ஆம் தேதி முதல் 28-ம் தேதி வரை 4 நாட்கள் சர்வதேச அளவிலான பாய்மர படகு போட்டிகள் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி:

புதுவையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமியும், பிரெஞ்சு துணை தூதர் காத்ரின் ஸ்குவாட்டும் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை அரசும், பிரெஞ்சு நாட்டு அரசும் இணைந்து புதுவையில் அடுத்த மாதம் (ஜனவரி) 25-ஆம் தேதி முதல் 28-ம் தேதி வரை 4 நாட்கள் சர்வதேச அளவிலான பாய்மர படகு போட்டிகளை நடத்த உள்ளது.

இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர். 8 வயது முதல் 19 வரையிலான வயதுடைய போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள்.

மேலும் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற பிரெஞ்சு வீரர்களும் இதில் கலந்து கொண்டு பாய்மரப்படகு குறித்த பயிற்சியும் அளிக்க உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.