சூரத்:
சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயணன் சாய் ஆகியோர் மீது குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் கடந்த 2013ம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தனர். அதில், ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயணன் சாயும் தங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டு இருந்தனர். அதன்படி ஆசாராம் பாபு மற்றும் நாராயணன் சாய் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக சூரத் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம், இவ்வழக்கில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயணன் சாய் குற்றவாளி என அறிவித்தது. தண்டனை விவரம் 20-ம் தேதி அறிவிக்கப்படும்.
சாமியார் ஆசாராம் பாபு ஏற்கனவே வெவ்வேறு கற்பழிப்பு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #AsaramBapu #NarayanSai