விவசாயி மரணம் 
செய்திகள்

நன்னிலம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து விவசாயி பலி

நன்னிலம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருவாரூர்:

நன்னிலத்தை அடுத்த தளிச்சேரியை சேர்ந்தவர் குமார் (வயது 50), விவசாயி.

இவர் அங்குள்ள ஒரு வாய்க்கால் மதகில் அமர்ந்த மது குடித்துள்ளார். அப்போது போதையில் தடுமாறி வாய்க்காலில் விழுந்து விட்டார். வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் தரையில் மோதி அவர் படுகாய மடைந்தார். அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி குமாரின் உறவினர் ரெத்தினசபாபதி நன்னிலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.