மரணம் 
செய்திகள்

நாங்குநேரியில் லாரி டிரைவர் திடீர் மரணம்

நாங்குநேரியில் லாரி டிரைவர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நெல்லை:

ஆந்திர மாநிலம் மேற்குகோதாவரி பகுதியைச் சேர்ந்தவர் சோமேஸ்வரராவ் (வயது 52). இவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவர் ஆந்திராவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சரக்குகள் ஏற்றி சென்றார்.

அங்கு சரக்குகளை இறக்கி விட்டு நேற்று ஆந்திராவிற்கு திரும்பி வந்தார். அவருடன் லாரி கிளீனர் வெங்கடேஸ்வரராவ் வந்தார். நேற்று இரவு அவர்கள் நாங்குநேரி அருகே வந்தபோது லாரியை ரோட்டோரம் நிறுத்திவிட்டு அங்குள்ள கடையில் சாப்பிட்டனர். சிறிதுநேரத்தில் சோமேஸ்வரராவ் நெஞ்சுவலி காரணமாக மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிளீனர் வெங்கடேஸ்வரராவ் கொடுத்த புகாரின் பேரில், நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.