நாங்குநேரி தொகுதி 
செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

மாலை மலர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற (அக்டோபர்) 21-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந் தேதி தொடங்கியது.

நாங்குநேரி தொகுதியில் இதுவரை 9 பேர் சுயேச்சைகளாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோர் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மனுக்கள் வாபஸ் பெற 3-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.