கோப்புபடம் 
செய்திகள்

நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி பெண் பலி - போலீசார் விசாரணை

நாமக்கல்லில் துணியை உலர வைத்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.*/

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் அலமேலு (வயது 50). இவருக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

எண்ணெய் விற்பனை செய்து, வாழ்க்கை நடத்தி வந்த அலமேலு, மாதத்திற்கு ஒரு முறை நாமக்கல் காவேட்டிப்பட்டியில் உள்ள அவரது தங்கை சந்தோசம் வீட்டிற்கு வருவது வழக்கம்.

அதன்படி நேற்று தங்கையின் வீட்டிற்கு வந்த அலமேலு, குளித்து விட்டு துணிகளை வீட்டின் முன்பு உள்ள கம்பியில் உலர வைத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார், அலுமேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.