காளிநாயக்கனூர்குட்டை தூர்வாரப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டு இருப்பதை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார். 
செய்திகள்

நாமக்கல், புதுச்சத்திரம் பகுதிகளில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மற்றும் புதுச்சத்திரம் பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாலை மலர்

நாமக்கல் மற்றும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளம் தூர்வாரும் பணிகள், கரை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடக்கமாக நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் ராசாம்பாளையம் ஊராட்சியில் ரூ.1 லட்சம் மதிப்பில் வரப்பு காட்டு குட்டை ஆழப்படுத்தப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டு உள்ளதை கலெக்டர் பார்வையிட்டார்.