செய்திகள்

நாமக்கல் அருகே லாரி டிரைவரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

நாமக்கல் அருகே லாரி டிரைவரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கம்பைநல்லூர்:

நாமக்கல் மாவட்டம், களங்காணியை சேர்ந்தவர் சேகர் (வயது 40 ), லாரி டிரைவர். இவர், கொல்கத்தாவில் இருந்து டாரஸ் லாரியில், பனியன் லோடு ஏற்றிக் கொண்டு, ஊத்தங்கரை வழியாக, கோவைக்கு சென்று கொண்டிருந்தார். மாற்று டிரைவராக, ராமச்சந்திரன் என்பவர் வந்தார்.

அரூர் - சேலம் பைபாஸ் சாலையில், திரு.வி.க., நகர் அருகே வந்த போது, பின்னால், இண்டிகா காரில் வந்த, மூன்று வாலிபர்கள், திடீரென லாரியை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் லாரியில் இருந்த சேகரிடம் எங்களுக்கு வழி விட மாட்டாயா என்று கூறி ஆபாசமாக திட்டினர். மேலும், அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். சேகர் அளித்த புகாரின்படி, அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அரூர் மேல்பாட்சாப்பேட்டையை சேர்ந்த சதாம் உசேன் ( 24), சுரேஷ் (23) ஆகியோரை, கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இம்ரான் (24) என்பவரை தேடி வருகின்றனர்.