ராசிபுரம்:
ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிபேட்டை துணை மின் நிலையத்தில் வருகின்ற 5-ந் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி அன்றைய தினம் நாமகிரிபேட்டை, சீராப்பள்ளி, தண்ணீர் பந்தல்காடு, மூலப் பள்ளிப்பட்டி, குரங்காத் துப்பள்ளம், காக்காவேரி, அரியாக்கவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம் பாளையம், பட்டணம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.