பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் மற்றும் சேந்தமங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர
பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, நல்லூர், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம்,
மணியனூர், வைரம் பாளையம், கோலாரம், இராமதேவம், நடத்தை, பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், கோதூர்,
திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துபாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளி
பாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம் மற்றும் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி,
சாலப்பாளையம், சிவியாம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவல்களை பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராணி, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.