வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் ஜெயிலிலேயே ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டார்.
இதற்கு அனுமதி கிடைக்காத நிலையில் முருகன் கடந்த 18-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தனது கணவரான முருகனின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி கடந்த 28-ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அவரிடம் சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டு 3-வது நாளாக இன்று அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
இதற்கிடையில் நேற்று மாலை சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமியிடம் நளினி மனு அளித்தார். அந்த மனுவில் எங்கள் மீது பொய்யான வழக்கு போடப்பட்டு 26 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறோம்.
மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கேட்டும் கிடைக்கவில்லை. சிறையிலேயே ஜீவசமாதி அடைய எனது கணவர் முருகன் உண்ணாவிரதத்தை கடந்த 18-ந்தேதி முதல் மேற்கொண்டு வருகிறார். நானும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
நளினி