செய்திகள்

வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் சந்திப்பு

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளான நளினி - முருகன் இன்று சந்தித்து பேசினர்.

மாலை மலர்

வேலூர்:

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் நளினி- முருகன் கோர்ட்டு உத்தரவுபடி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.

அதன்படி இன்று பெண்கள் ஜெயிலில் நளினி- முருகன் சந்திப்பு காலை 8 மணி முதல் 9 மணி வரை நடந்தது. ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை பாதுகாப்புடன் அழைத்து சென்று நளினியுடனான சந்திப்பு முடிந்ததும் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர். #Tamilnews