செய்திகள்

டிரம்ப் நிர்வாண சிலையை ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்ப்புக்கு எதிராக சர்வதேச கவனத்தை கொண்டு வர உருவாக்கப்பட்ட அவரது நிர்வாண சிலையை தற்போது அமானுஷ்ய ஆராய்ச்சியாளர் ஒருவர் 18 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். #Trump

மாலை மலர்

நியூயார்க்:

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டார். அப்போது, அவருக்கு எதிராக பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் அனார்சிஸ்ட் என்ற நிறுவனம் டிரம்ப்பை போல ஐந்து நிர்வாண சிலைகளை தயாரித்து (அந்தரங்க உறுப்புகள் இல்லாமல்) ஐந்து நகரங்களில் காட்சிப்படுத்தி வைத்தது.

இதில், நான்கு சிலைகள் டிரம்ப் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு சிலை மட்டும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த சிலை சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அமானுஷ்ய ஆராய்ச்சியாளர் ஸாக் பாகான்ஸ் என்பவர் டிரம்ப் சிலையை இந்திய மதிப்பில் சுமார் 18 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார்.

இந்த சிலையை லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மியூசியத்தில் வைக்க போவதாக அவர் கூறியுள்ளார். அமானுஷ்ய ஆராய்சியாளரால் டிரம்ப் சிலை ஏலம் எடுக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்க நெட்டிசன்கள் கேலியாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நிர்வாண சிலையை வைத்து சூனியம் செய்து அமெரிக்காவை டிரம்ப் இடம் இருந்து மீட்கலாம் என பலர் கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். #Trump