செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நஜம் சேத்தி தேர்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நஜம் சேத்தி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த 83 வயதான ஷகாரியர்கான் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அந்த பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நஜம் சேத்தி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். 10 உறுப்பினர்கள் கொண்ட கிரிக்கெட் வாரிய கமிட்டி அவரை போட்டியின்றி தேர்வு செய்தது. அவரது பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும். 69 வயதான நஜம் சேத்தி ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செயற்குழுவின் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

SCROLL FOR NEXT