பாகு:
ஜவஹர்லால் நேரு, எகிப்து தலைவர் ஜமால் நாசர் உள்ளிட்டோரால் 1961-ம் ஆண்டு அணிசேரா இயக்கம் தொடங்கப்பட்டது. எந்த ஒரு அதிகார மையத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ அணி சேராத நாடுகளின் குழுமாகும். தற்போது 120 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன.
அணி சேரா இயக்கத்தின் 18-வது உச்சி மாநாடு அஜர்பைஜான் நாட்டில் இன்று தொடங்கியது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையிலான குழு அஜர்பைஜான் சென்றது. அவர்களை அஜர்பைஜான் பிரதமர் இல்ஹாம் அலியேவ் வரவேற்றார்.
இன்று நடைபெற்ற முதல்நாள் உச்சிமாநாட்டின் போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும், நேபாளம் பிரதமர் கே.பி ஷர்மா ஒலி, வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.