விபத்து பலி 
செய்திகள்

நாகமலைபுதுக்கோட்டை அருகே பஸ் மோதி டிராக்டர் டிரைவர் பலி

நாகமலைபுதுக்கோட்டை அருகே பஸ் மோதி டிராக்டர் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகமலைபுதுக்கோட்டை:

நாகமலைபுதுக்கோட்டை அருகே கீழமாத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சோலை(வயது 48). டிராக்டர் டிரைவரான இவர் கொடிமங்கலத்தில் இருந்து கீழமாத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். காளியம்மன் கோவில் தெரு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சோலை சம்பவ இடத்திலே பலியானார். இது குறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.