செய்திகள்

கல்வியில் பெண்கள் ‘டாப்’ ஆனாலும் இதுவரை ஒரு பெண் எம்.எல்.ஏ. கூட இல்லை

பெண்கள் கல்வி விகிதத்தில் முன்னிலையில் இருக்கும் நாகாலாந்து மாநிலம், உருவானது முதல் தற்போது வரை ஒரு பெண் கூட சட்டசபைக்கு தேர்தெடுக்கப்பட்டது இல்லை. #Nagaland

இயற்கை எழில் கொஞ்சும் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் தற்போது தேர்தல் அணல் வீசி வருகின்றது. வரும் 27-ம் தேதி இங்கு சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. பழங்குடி மக்கள் வசிக்கும் இம்மாநிலத்திற்கு அரசியல் சாசனம் சில சிறப்பு அந்தஸ்துகளை வழங்கியுள்ளது. அதன்படி, இங்குள்ள அனைத்து மக்களுமே பாதுகாக்கப்பட்டவர்கள்.

1963-ம் ஆண்டு தனி மாநிலமாக உருவான நாகாலாந்துவில் இது வரை ஒரு பெண் கூட தேர்தலில் வென்று சட்டசபைக்கு சென்றது இல்லை. அப்போது முதல் நேற்று வரை வெறும் 30 பெண்கள்தான் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்பதே சோகம் தரும் செய்திதான்.

அத்தி பூத்தது போல 1977-ம் ஆண்டு ரானோ எம் ஸ்ஹாயிசா என்பவர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். அதோடு, சரி அங்கு பெண் எம்.பி.யும் இதுவரை தேர்வானது இல்லை. இத்தனைக்கும் அங்குள்ள பெண்கள் படிப்பறிவு அற்றவர்கள் அல்ல. இந்தியாவின் பெண் கல்வி விகிதமே 65 சதவிகிதம் என்று இருக்கும் நிலையில், நாகலாந்தில் அது 76 சதவிகிதமாக உள்ளது. தனியார், மற்றும் அரசுத்துறையில் பெண்கள் கனிசமான அளவில் உள்ளனர்.

பா.ஜ.க பெண் வேட்பாளர் ராஹிலா

SCROLL FOR NEXT