செய்திகள்

நாகாலாந்து தேர்தலில் வன்முறை - வாக்குச்சாவடியில் குண்டுவெடித்து ஒருவர் காயம்

நாகாலாந்து மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ஒரு வாக்குச்சாவடியில் குண்டு வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார்.

மாலை மலர்

நாகாலாந்து மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாகா அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஏற்கனவே வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றதால், தேர்தலில் இது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மொத்தம் உள்ள 2156 வாக்குப்பதிவு மையங்களில் 1100 மையங்கள் பதற்றம் நிறைந்தவையாகவும், 530 மையங்கள் தாக்குதல் அபாயம் நிறைந்தவையாகவும் கணிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.  எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குச்சாவடிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மத்திய ஆயுதப்படையினரும் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நாகா போராட்டம் நடைபெற்ற மலைப்பகுதிகளில் அதிக அளவிலான மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்னர்.

இந்நிலையில், மோன் மாவட்டத்தின் திஜிட் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திடீரென குண்டு வெடித்தது. இதனால் வாக்காளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.