ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இறுதி போட்டி நடந்தது.
இந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால், கிரீக் நாட்டை சேர்ந்த ஸ்டெபனோஸ் டிட்சிபாசுடன் மோதினார்.
இந்த போட்டியில் நடால் அதிரடியாக ஆடி 6-2, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இது இவரது 11-வது பார்சிலோனா ஓபன் சாம்பியன் பட்டமாகும். இந்த ஆட்டம் சுமார் 40 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. #Tamilnews