ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று காலிறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால், 140வது இடத்தில் உள்ள சுலோவேகியா நாட்டின் மார்ட்டின் கிளிசானை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் நடால் 6-0, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி போட்டியில் பல்கேரியாவை சேர்ந்த கிரிகர் டிமிட்ரோவ், ஸ்பெயினை சேர்ந்த பாப்லோ கரிபியோ பஸ்டாவிடம் 6-3, 7-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். #Tamilnews