நச்சலூர்:
நச்சலூர் பகுதியில் சிலர் மது விற்பதாக குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நச்சலூர் வி.ஆர்.ஓ. காலனியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் திராவிடமணி மனைவி ராமாயி (வயது 50) என்பவர் டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி அதனை கூடுதல் விலைக்கு விற்றது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து ராமாயியை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.